நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

-சிவவாக்கியர்

சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது.
அந்த உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே
மனக்கோயிலினுள் இறைவன் இருப்பதை அறியாமல்
வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வ மென்று பெயரிட்டு பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது
அறியாமை